shadow

நிதின் கட்காரியை ராகுல்காந்தி புகழ்ந்தது ஏன்?

பாஜகவின் பிரதமர் வேட்பாளராக மோடிக்கு பதில் நிதின் கட்காரி அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக வதந்திகள் பரவி வரும் நிலையில் திடீரென காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, நிதின்கட்காரியை புகழ்ந்து ஒரு டுவீட்டை பதிவு செய்தார்.

இந்த நிலையில் நிதின் கட்காரியை மோடிக்கு எதிரானவராக மாற்ற ராகுல் காந்தி முயற்சிக்கின்றாரா? என்ற கேள்வியை எழுப்பி இருக்கின்றனர் மோடி ஆதரவாளர்கள்.

மோடி அலை கடந்த 2014ஆம் ஆண்டு இருந்த அளவு இல்லை என்றாலும் இன்னும் பல மாநிலங்களில் மோடிக்கு நல்ல செல்வாக்கு உள்ளது. எனவே நிதின்கட்காரியை தூண்டிவிட்டு பாஜக பிரதமர் வேட்பாளரில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்துவதே காங்கிரஸ் நோக்கமாக இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ராகுல்காந்தியின் இந்த புகழ்ச்சியும் இதற்காகத்தான் என்று கூறப்படுகிறது.

 

Leave a Reply