நாளை ரஜினி-பெரியார் பிரச்சனை எல்லாம் மறந்துவிடும்: சூர்யா ரசிகர்கள் அறிவிப்பு

ரஜினிகாந்த்-பெரியார் பிரச்சனை கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் இருந்து வரும் நிலையில் இன்றுடன் அந்த பிரச்சனை சமூக வலைதள ட்ரெண்டிங்கில் இருந்து முடிந்துவிடும் என்றும் நாளை முதல் சூர்யாதான் டிரெண்டிங்கில் இருப்பார் என்றும் சூர்யா ரசிகர்கள் அறிவித்துள்ளனர்

சூர்யா நடித்து முடித்துள்ள சூரரைப்போற்று என்ற திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘மாறாதீம்’ என்ற பாடல் நாளை மாலை 4 மணிக்கு வெளியாக உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் சற்றுமுன்னர் வெளியிட்டுள்ளனர்

இதனை அடுத்து இப்போது இது குறித்த ஹேஷ்டேக்கை சமூக வலைத்தளங்களில் ட்ரண்ட் செய்து வரும் சூர்யா ரசிகர்கள் , நாளை மாலை ரஜினி-பெரியார் விவகாரம் பின்னுக்கு தள்ளப்பட்டு சூர்யாவின் ஹேஷ்டேக் தான் டிரெண்டில் இருக்கும் என்று சூர்யா ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்

Leave a Reply