shadow

நாளை முதல் பெட்ரோல் விலை உயருமா?

இன்று ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் வந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த முடிவுகள் பாஜக சாதகமாக வரவில்லை. கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை தேர்தல் காரணமாக குறைக்கப்பட்டதாக கூறப்பட்டு வந்த நிலையில் இன்று தேர்தல் முடிவுகள் வந்துவிட்டதாகவும், அதிலும் பாதகமாக வந்துவிட்டதாலும் நாளை முதல் பெட்ரோல் டீசல் விலை உயர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

ஏனெனில் கர்நாடகாவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்ற சமயத்தில் தொடர்ந்து 19 நாட்கள் பெட்ரோல், டீசல் விலை சரிவு கண்டு, தேர்தல் முடிவுக்கு பின் பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் கண்டது. அதேபோல இப்போது 5 மாநில தேர்தலுக்கு பின்பும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து விடுமோ என்ற கலக்கத்தில் வாகன ஒட்டிகள் உள்ளனர்.

இருப்பினும் தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்து கொண்டே வருவதால் பெட்ரோல் விலை உயர வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. சென்னையில் கடந்த அக்டோபர் மாதம் 16-ஆம் தேதி 80 ரூபாய் 04 காசுகளாக இருந்த பெட்ரோல் விலை இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 72 ரூபாய் 82 காசுகளாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply