shadow

நாளை மறுநாள் வெளியாகும் சியோமி ரெட்மி நோட் 7 குறித்த தகவல்கள்

சீன நிறுவனமான சியோமி ரெட்மி வரிசையில் பல்வேறு மாடல் ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு வரும் நிலையில் நாளை மறுநாள் ரெட்மி நோட் 7 என்ற புதிய மாடலை இந்தியாவில் வெளியிடவுள்ளது.

6 ஜிபி ரேம் கொண்ட இந்த மாடலின் டிஸ்ப்ளே 6.26 இன்ச் அளவு கொண்டது. கைரேகை பதிவு வசதி உள்ள இந்த போனின் இண்டர்னல் ஸ்டோரேஜ் 64 ஜிபி ஆகும். பின்புறத்டில் 12 எம்பி மற்றும் 5 எம்பி கொண்ட இரண்டு கேமிராக்களும் 24 எம்பி கொண்ட செல்பி கேமிராவும் இந்த மாடலில் உள்ளது. இந்த மாடலின் பேட்டரி திறன் 4,000 எம்.ஏ.எச் ஆகும்.

இந்த புதிய மாடலின் விலை ரூ.11 ஆயிரம் என கூறப்பட்டாலும் விலை இன்னும் உறுதி செய்யப்படவில்லை

Leave a Reply