shadow

நாளை சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தின் டிரைலர் ரிலீஸ்

சிவகார்த்திகேயன் நடித்த ‘சீமராஜா’ நல்ல வெற்றியை பெற்ற நிலையில் தற்போது அவர் நயன்தாராவுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் தயாரித்து முக்கிய வேடத்தில் நடித்த ‘கனா’ திரைப்படம் கடந்த சில வாரங்களுக்கு முன்பே ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் படத்தின் டிரைலர் நாளை வெளியாகும் என சிவகார்த்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பரும் ‘நெருப்புடா’ பாடல் புகழ் பாடகர் மற்றும் பாடலாசிரியருமான அருண்காமராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயன், சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், தர்ஷன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு திபு நைனன் தாமஸ் இசையமைத்துள்ளார்.

 

Leave a Reply