நாமக்கல் அதிமுக வேட்பாளர் காளியப்பன் வேட்புமனுவுக்கு சிக்கல்?

நாமக்கல் தொகுதி அதிமுக வேட்பாளர் காளியப்பன் வேட்புமனு நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் தொகுதி அதிமுக வேட்பாளர் காளியப்பன் மத்திய அரசு பணிகளில் ஒப்பந்ததாராக இருப்பதால் அவருடைய வேட்புமனுவை ஏற்கக்கூடாது என்று திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

திமுக தரப்பின் இந்த எதிர்ப்பையடுத்து நாமக்கல் தொகுதி அதிமுக வேட்பாளர் காளியப்பன் வேட்புமனு மீதான பரிசீலனையை 2 மணி வரை ஒத்தி வைத்து ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Leave a Reply