நான் ராஜினாமா செய்ய காரணம் சித்தராமையாதான்: அதிருப்தி எம்.எல்.ஏ குற்றச்சாட்டு

கர்நாடக காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களில் ஒருவரான சிவராம் ஹெப்பர் என்பவர் காங்கிரஸ் முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையாவின் வழி காட்டுதலின் படியே எம்.எல்.ஏ. பதவியை மட்டும் ராஜினாமா செய்ததாக கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து சிவராம் ஹெப்பர் மேலும் கூறியபோது, ‘சிறிது நாட்கள் மட்டும் நாங்கள் விலகி இருக்குமாறு சித்தராமையா கூறி இருந்தார். அதன்படி நடந்து கொண்டிருக்கிறோம். சித்தராமையாவின் முடிவின்படி எதிர்காலத்தில் நடந்து கொள்வோம். பா.ஜனதாவில் சேருவது தொடர்பாக வெளியாகி உள்ளது வெறும் வதந்தி தான். அதிருப்தி எம்.எல். ஏ.க்களுடன் கலந்து ஆலோசித்த பிறகுதான் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்று கூறினார்.

ஆனால் இதனை சித்தராமையா மறுத்துள்ளார். அதிருப்தி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்வதற்கும், ஆட்சியை கவிழ்ப்பதற்கும் நான் தூண்டிவிட்டதாக அதிருப்தி எம்.எல்.ஏ. கூறியதாக ஒரு சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது தீய நோக்கங்களோடு கூறப்படும் பொய்யான குற்றச்சாட்டாகும். ராஜினாமா செய்ததன் காரணம் என்னவென்பது, எஞ்சியுள்ள நிகழ்வுகள் நடந்து முடிந்த பிறகு தெளிவாகும் என்று சித்தராமையா தெரிவித்தார்

Leave a Reply