நான் தான் அடுத்த தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர்: கராத்தே தியாகராஜன் அதிரடி

தமிழக காங்கிரஸ் கட்சியில் இருந்து சமீபத்தில் கராத்தே தியாகராஜன் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை நான் விரைவில் பிடிப்பேன் என்று கூறியுள்ளார்

காங்கிரஸ் கட்சிக்கு காலங்காலமாக உழைத்த தொண்டர்களுக்கு உள்ளாட்சித் தேர்தலில் வாய்ப்பளிக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் பேசியதற்காக என் மீது கட்சி விரோத நடவடிக்கை எடுக்கப்பட்டது. தமிழக காங்கிரஸ் தலைமையின் தவறான தகவலின் பேரில் தான் டெல்லி மேலிடம் என் மீது நடவடிக்கை எடுத்துள்ளது

எனவே விரைவில் நான் டெல்லி சென்று மேலிடத்திற்கு என்னுடைய நிலையை புரியவைத்து மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைவேன். அது மட்டுமின்றி தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியையும் விரைவில் பிடிப்பேன் என்று கராத்தே தியாகராஜன் கூறியுள்ளார்

Leave a Reply