நான் கர்ப்பம் என்பதை லேட்டாகத்தான் தெரிந்து கொண்டேன்: எமி ஜாக்சன்
நடிகை எமிஜாக்சன் சமீபத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாக இன்ஸ்டாகிராமில் தெரிவித்திருந்தார். ஜார்ஜ் என்பவரை அவர் காதலித்து வந்தாலும் இருவருக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை. ஆனால் பிரிட்டனில் திருமணத்திற்கு முன்னரே கர்ப்பம் அடைவது சர்வ சாதாரணம் என்பதால் இந்த தகவலை அவர் தைரியமாக இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.
இந்த நிலையில் ‘நான் கர்ப்பமாக இருப்பது எனக்கே ஆறு வாரங்களுக்கு தெரியாது என்று தற்போது புதிய தகவலை தெரிவித்துள்ளார். அதேபோல் எனக்கு மகன் பிறந்தாலும், மகள் பிறந்தாலும் என்னை மாதிரியே அவர் உலகம் முழுவதும் சுற்ற கற்று கொடுப்பேன் என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில் எமி-ஜார்ஜ் திருமணம் அடுத்த மாதம் நடைபெறும் என தெரிகிறது
Leave a Reply
You must be logged in to post a comment.