shadow

நானும் ஒரு இந்து தீவிரவாதிதான்: கமலுக்கு பதிலடி கொடுத்த இல.கணேசன்

நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் வார இதழ் ஒன்றில் எழுதிய தொடரில் ‘இனிமேலும் இந்து தீவிரவாதிகள் இல்லை என்று கூற முடியாது என்று சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை தெரிவித்திருந்தார்.

இந்த முறை கமலுக்கு பொதுமக்களே பதிலடி கொடுத்து வருகின்றனர். விஸ்வரூபம் பட பிரச்சனையின்போது கமலுக்கு முழு ஆதரவு தந்ததும், பணம் கொடுத்து உதவியதும் இதே இந்து தீவிரவாதிகள் தான் என கமலுக்கு டுவிட்டர் பயனாளிகள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் பாஜக மாநிலங்களவை உறுப்பினர் இல.கணேசன் செய்தியாளர்களை இதுகுறித்து கூறியப்போது, ‘தீவிரவாதம் என்பது நல்லவார்த்தை. ஆனால் இப்போது கெட்ட வார்த்தையாக மாறி விட்டது. தேசத்திற்கு விரோதமாக நடந்து கொள்வது, அந்நிய நாட்டுக்கு ஆதரவாக செயல் படுபவர்களை பயங்கரவாதிகள் என்று சொல்வது தவறில்லை.

மேலும் நானும் கூட இந்து தீவிரவாதி தான்; இந்து மதத்தின் மீது பற்று கொண்ட தீவிரவாதி என்று அவர் தெரிவித்தார்.

Leave a Reply