shadow

நாடாளுமன்ற சபாநாயகர் கைது: உலக நாடுகள் கண்டனம்

வெனிசுலா நாட்டின் சபாநாயகர் ஜூவான் கெய்டோ என்பவர் அதிபர் ஆவதற்காக முயற்சித்து வருவதாக கூறப்படும் நிலையில் நேற்று திடீரென பாதுகாப்பு படை வீரர்களால் கைது செய்யப்பட்டார். இதற்கு அமெரிக்கா உள்பட உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

வெனிசுலா நாட்டின் அதிபராக நிகோலஸ் மதுரோ பதவியேற்பதற்கு எதிர்க்கட்சிகள் கடும் ஆட்சேபனை தெரிவித்து வருகின்றனர். எனினும் அவர் கடந்த 10-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு முன்னிலையில் 2-வது முறையாக அந்நாட்டின் அதிபராக பதவி ஏற்றுக்கொண்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் எதிர்க்கட்சிகள் நிகோலஸ் மதுரோ பதவி விலக வேண்டும் என்றும், புதிய தேர்தலை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதற்கிடையில் நாடாளுமன்ற சபாநாயகரான ஜூவான் கெய்டோ, தான் அதிபர் ஆவதற்கு தயாராகி வருவதாக அறிவித்தார்.

இந்த நிலையில், தலைநகர் கராக்கசில் நடைபெறும் பேரணியில் பங்கேற்பதற்காக ஜூவான் கெய்டோ நேற்று முன்தினம் காரில் சென்றுகொண்டிருந்த போது பாதுகாப்புபடை வீரர்கள் அவரை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. எனினும் கைது செய்யப்பட்ட சில மணி நேரங்களுக்கு பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார்.

 

 

Leave a Reply