பரபரப்பு தகவல்

நாடாளுமன்ற எம்பிக்களுக்கு கொரோனா சோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த பரிசோதனை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடருக்கு முன்பாக செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.

நாடாளுமன்ற அவை கூடுவதற்கு 72 மணி நேரத்திற்கு முன் கொரோனா சோதனை செய்ய வேண்டும் என்றும், கொரோனா சோதனை முடிவுகளை அவையில் எம்பிக்கள் அளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த முறை பாராளுமன்றத்தில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 14ம் தேதி நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளும் தொடங்க வாய்ப்பு இருப்பதாகவும், நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது என்றும், அவை தொடங்கி இடைப்பட்ட நாட்களிலும் கொரோனா சோதனை செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.

எம்பிக்களுக்கு ரேண்டம் கொரோனா சோதனை அவ்வப்போது செய்யப்படும் என்றும், எம்பிக்கள் அனைவரும் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.

Leave a Reply