நாசா அனுப்பிய ‘ஹலோ’ மெசேஜிற்கு விக்ரம் லேண்டரின் பதில்!

இஸ்ரோ விஞ்ஞானிகள் சமீபத்தில் அனுப்பிய சந்திராயன்-2 விண்கலத்திலிருந்து விக்ரம் லேண்டர் பிரிந்து சென்று நிலவில் தரையிறங்க முயற்சித்த கடைசி நிமிடத்தில் திடீரென தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இந்த தகவல் தொடர்பை மீட்க இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு நாசா விஞ்ஞானிகளும் தற்போது உதவி செய்து வருகின்றனர். ஏனெனில் நாசாவுக்கு சொந்தமான லேசர் ரிப்ளெக்டர் என்ற கருவி லேண்டரில் இணைக்கப்பட்டுள்ளதால், விக்ரம் லேண்டர் செயல்பட்டால் தான் அந்த லேசர் ரிப்ளெக்டர் கருவி செயல்படும் என்பதால் நாசா விஞ்ஞானிகள் தற்போது களத்தில் இறங்கியுள்ளனர்

நாசாவுக்கு சொந்தமான விண்வெளி நிலையங்களில் இருந்து ’ஹலோ’ என்ற மெசேஜ் அனுப்பப்பட்டு இருப்பதாகவும், இதுவரை விக்ரம் லேண்டரில் இருந்து தகவல் எதுவும் வரவில்லை என்றாலும் விரைவில் அதனிடமிருந்து சமிக்ஞைகள் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாகவும் நாசா விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர் நாசா விஞ்ஞானிகளின் நம்பிக்கை நிறைவேறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Reply