நாங்க ரொம்ப சின்ன கட்சி: பத்திரிகையாளர்களை கலாய்த்த தினகரன்

நாங்கல்லாம் ரொம்ப சின்ன கட்சி, நீங்க எங்களை எல்லாம் கண்டுக்கிடவே மாட்டீங்க, பெரிய கூட்டணி, மெகா கூட்டணியைத்தான் கண்டுக்கிடுவிங்க என்று பத்திரிகையாளர் சந்திப்பில் டிடிவி தினகரன் தெரிவித்தார்.

மேலும் ஒரே ஒரு கட்சி தவிர வேறு எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை என்றும், கிட்டத்தட்ட நாங்கள் தனித்து போட்டியிடுவதாகவும் கூறிய டிடிவி தினகரன், ‘தேர்தல் முடிந்த பின்னர் மக்கள் எந்த கூட்டணியில் உள்ளார்கள் என்பதை நீங்களும் மற்ற கட்சியினர்களும் புரிந்து கொள்வார்கள் என்று தெரிவித்தார்.

மேலும் தேர்தல் ஆணையம் மற்றும் மத்திய அரசின் நடவடிக்கை வித்தியாசமாக இருப்பதாகவும், நீதிமன்ற வழக்கை காரணம் காட்டினால் இந்தியாவில் எந்த தொகுதியிலும் தேர்தல் நடத்த முடியாது என்றும் டிடிவி தினகரன் தெரிவித்தார்.

Leave a Reply