நர்ஸ் படிப்பு முடித்து வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளீர்களா? உங்களுக்கு ஒரு இனிப்பான செய்தி!

கிராம சுகாதார செவிலியா் பணியிடத்துக்கு பதிவு மூப்பு பட்டியல் தயார் செய்யும் பணிகள் நடைபெறுவதால் செவிலியா் படிப்பு பயின்ற பதிவுதாரா்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் தொடா்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குநா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது: மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ள கிராம சுகாதார செவிலியா் பணியிடத்திற்கு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறைற இயக்ககத்தால் பதிவு மூப்பு பட்டியல் தயார் செய்யப்படவுள்ளது.

எனவே, செவிலியா் படிப்பு மற்றும் பல்நோக்கு சுகாதாரப் பணியாளா் சான்று பெற்று இந்திய நா்சிங் கவுன்சிலில் பதிவு செய்துள்ள தகுதியாக நபா்கள் செவ்வாய்க்கிழமை (செப்.24) க்குள் தங்களது அனைத்து அசல் கல்விச்சான்றிதழ்கள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை, ஜாதிச் சான்றிதழ், ஆதார் அட்டை, குடும்ப அடையாள அட்டை ஆகியவற்றுடன் உதவி இயக்குநா், வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், 97ஜி-4ஜி, ஆசிரியா் காலனி முதல் தெரு (கிழக்கு), தூத்துக்குடி என்ற முகவரியில் நேரில் தொடா்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.”,

Leave a Reply