நடுவானில் பிரபல பாடகியை உள்ளாடையுடன் நிற்க வைத்த விமான ஊழியர்


அமெரிக்க விமானம் ஒன்றில் பிரபல பாடகி ஒருவரை உள்ளாடையுடன் ஆண் ஊழியர் ஒருவர் நிற்க வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

அமெரிக்காவில் உள்ள ஒரு விமானத்தில் பிரபல இளம் பாடகி ஒருவர் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவர் அணிந்திருந்த டீசர்ட்டில் ஆபாசமான வார்த்தைகள் கொண்ட எழுத்துக்கள் இருந்தன

எனவே அந்த டீ-சர்ட்டை கழட்டி விட்டு வேறு டீ-சர்ட்டை அணியுமாறு அந்த ஆண் ஊழியர் வலியுறுத்தி உள்ளார். ஆனால் அதற்கு அந்த இளம் பாடகி மறுக்கவே அந்த ஆண் ஊழியர் வலுக்கட்டாயமாக இளம்பெண்ணின் டி-ஷர்ட்டை கழட்டியுள்ளார்.

இதனால் அவர் உள்ளாடையுடன் பயணிகள் முன்னிலையில் நிற்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டதாகவும் அந்த பாடகி தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்

ஆனால் அவருடன் பயணம் செய்த பயணிகள் இதனை சுத்த பொய் என்று கூறியுள்ளனர். அந்த ஆண் ஊழியர் கழிப்பறை சென்று உடை மாற்றிக் கொண்டு வருமாறு கூறியதாகவும், ஆனால் அந்த பாடகி தான் வேண்டுமென்றே டி-ஷர்டை கழட்டி பயணிகள் முன்னிலையில் வேறு உடையை அணிந்ததாகவும் அந்த ஆண் ஊழியர் அப்பாவி என்றும் தெரிவித்துள்ளனர்

இந்த புகார் குறித்து அமெரிக்க விமான நிலையம் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply