shadow

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் கடந்த 2001ஆம் ஆண்டு 21ஆம் தேதி மறைந்தார் .

அவரது மறைவிற்கு ஒட்டுமொத்த இந்திய திரையுலகமே இரங்கல் தெரிவித்தது.

இந்த நிலையில் அவரது 20 ஆவது நினைவு தினம் இன்று திரை உலகினர் மத்தியில் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

திரையுலகினர் பலர் அவரை அவரது நினைவைப் போற்றி புகழ்ந்து வருகின்றனர் என்பதும் அவருடன் நடித்த அனுபவத்தை தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் கமல்ஹாசன் கூறியிருப்பதாவது: திரை நடிப்புக்கென்று ஒரு மைல் கல்லை நிர்ணயித்துச் சென்றிருக்கும் கலைஞர் சிவாஜி கணேசனின் நினைவு நாள் இன்று. ஏதோ ஒரு திரையில் படம் என ஒன்று சலனமுறும் காலம்வரை நடிகர் திலகத்தின் நினைவு தமிழர் நெஞ்சில் அலையடித்தபடியே இருக்கும்.