நடிகர் சங்க தேர்தால் எனக்கு ரூ.25 ஆயிரம் நஷ்டம்: பார்த்திபன்

நடிகர் சங்கத் தேர்தல் பல தடைகளைத் தாண்டி நேற்று நடைபெற்று முடிந்த நிலையில் இந்த தேர்தலில் வாக்களித்த நடிகரும் இயக்குநருமான இரா.பார்த்திபன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

தேர்தலில் வாக்களிக்க பலருக்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. அதேபோல் தனக்கு 25 ஆயிரம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதாவது, இன்று சவுண்ட் மிக்சிங் செய்வதற்காக மும்பை செல்வதற்கு எனக்கும் எனது உதவியாளருக்கும் விமானத்தில் டிக்கெட் புக் செய்திருந்தேன். தேர்தல் ரத்து என்ற தகவலால் டிக்கெட்டை புக் செய்தேன். ஆனால் பின்னர் ரத்து இல்லை என்ற தகவலால், டிக்கெட்டை ரத்து செய்ய முடியவில்லை. இதனால் 25 ஆயிரம் ரூபாய் நஷ்டம் என்று பார்த்திபன் கூறினார்

Leave a Reply