shadow

நடிகராக மாறிய பிரபல இயக்குனர்

பாலசந்தர், பாரதிராஜா முதல் இன்றைய இளையதலைமுறை இயக்குனர்கள் வரை பல இயக்குனர்கள் நடிகர்களாக மாறியுள்ள நிலையில் ‘காதல்’ உள்பட பல வெற்றிப்படங்களை இயக்கிய பாலாஜி சக்திவேல் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். அந்த படம் தான் தனுஷ் நடித்து வரும் ‘அசுரன்’

இந்த படத்தின் முக்கிய வேடம் ஒன்றில் பாலாஜி சக்திவேல் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதாகவும், பல இயக்குனர்கள் நடிக்க அழைப்பு விடுத்தும் நடிக்க மறுத்த பாலாஜி சக்திவேல், இந்த படத்தின் இயக்குனர் வெற்றிமாறனின் அழைப்பை நிராகரிக்காமல் ஒப்புக்கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து வரும் ‘அசுரன்’ படத்தில் தனுஷ், மஞ்சுவாரியர், கருணாஸ் மகன் உள்பட பலர் நடித்து வருகின்றனர். ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கின்றார்

 

Leave a Reply