த்ரிஷாவின் அடுத்த பட டைட்டில் ‘ராங்கி’

கடந்த பல ஆண்டுகளாக தமிழ்த்திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வரும் த்ரிஷா தற்போது நாயகிக்கு முக்கியத்துவம் தரும் வேடங்களில் மட்டும் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் நடிக்கவுள்ள அடுத்த படம் ‘ராங்கி’

இந்த படத்தில் த்ரிஷாவுக்கு ஜோடி இல்லை. படத்தின் முக்கிய கேரக்டரில் த்ரிஷா நடிக்கவிருக்கும் இந்த படத்தை லைகா நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கவுள்ளது

எங்கேயும் எப்போதும்’, ‘இவன் வேற மாதிரி’ போன்ற படங்களை இயக்கிய சரவணன் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்திற்கு சத்யா இசையமைக்கவுள்ளார். இந்த படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகவுள்ளது

Leave a Reply