shadow

தோசைக்கு தொட்டு கொள்ள சத்தான கறிவேப்பிலை பொடி

தேவையான பொருட்கள் :

கறிவேப்பிலை – 2 கப்
தனியா தூள் – 2 டீஸ்பூள்
தேங்காய் – 1/2 மூடி
எண்ணெய் – 4 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் – 10
கடலை பருப்பு – 1/2 கப்
உளுந்தம் பருப்பு – 1/4 கப்
உப்பு – தேவையான அளவு

செய்முறை :

* தேங்காயை துருவிக்கொள்ளவும்.

* வாணலியில் எண்ணெய் விடாமல் தேங்காய் துருவலை போட்டு வறுக்கவும். தேங்காய் நன்றாக வாசனை வந்து சிவந்த பதத்துக்கு வருவதற்கு முன்பு எடுத்து விடவும்.

* அடுத்து வெறும் வாணலியில் தனியாவைப் போட்டு வெடிக்கவிட்டு வறுக்கவும். இதுவும் நன்றாக மணம் வரும் வரை சிவக்க வேண்டும்.

* அடுத்து வாணலியில் எண்ணெய் விட்டு மிளகாய் வற்றலை சிவக்க வறுத்து எடுக்கவும்.

* அடுத்து கறிவேப்பிலை, கடலைப் பருப்பு, உளுந்தம் பருப்பு, உப்பு சேர்த்து வறுக்கவும். பருப்புகள் பொன்னிறமாக சிவக்கும் வரை வறுக்கவும். இதற்குள் கறிவேப்பிலையும் நீர் வற்றி வரும்.

* வறுத்த பொருட்கள் அனைத்தும் நன்றாக ஆறியதும் மிக்சியில் போட்டு நன்றாகப் பொடிக்கவும்.

* சூப்பரான சத்தான கறிவேப்பிலை பொடி ரெடி.

* கறிவேப்பிலை பொடியில் நல்லெண்ணெய் விட்டு இட்லி, தோசைக்கும் தொட்டுக் கொள்ளலாம்.

* இதைச் சாதத்தோடு நெய் விட்டு சூடாகக் கலந்து சாப்பிடலாம். இட்லி, தோசைக்கும் தொட்டுக் கொள்ளலாம்.

Leave a Reply