shadow

‘தேவர் மகன் 2’ படம் குறித்து கமல்ஹாசன் அறிவிப்பு

கோலிவுட் திரையுலகில் தற்போது இரண்டாம் பாகம் சீசன் கடந்த சில வருடங்களாக இருந்து வரும் நிலையில் கமல்ஹாசன் தனது ‘தேவர் மகன் 2’ படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

கடந்த 1992ஆம் ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘தேவர் மகன்’ படத்தின் இரண்டாம் பாகத்தில் கமல் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்த நிலையில் இந்த செய்தியை கமல்ஹாசன் தற்போது உறுதி செய்துள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடிக்கவுள்ள கமல் இந்த படத்தை முடித்துவிட்டு ‘தேவர் மகன் 2’ படத்தை தொடங்குவார் என தெரிகிறது.

கமல்ஹாசனுக்கு தேசிய விருதை பெற்று கொடுத்த ‘தேவர் மகன்’ திரைப்படத்தில் கமல்ஹாசனுடன் சிவாஜி கணேசன், நாசர், ரேவதி, கவுதமி நடித்து இருந்தனர்.

Leave a Reply