shadow

தேசிய புள்ளியியல் ஆணையம், செயல் தலைவர் பி.சி.மோகனன் பதவி விலகல்

மத்திய அரசுக்கும் சிபிஐ அமைப்புக்கும் இடையே சமீபத்தில் மோதல் ஏற்பட்டு அதன்பின் பரபரப்பான பல நிகழ்வுகள் நடந்த நிலையில் தற்போது நாட்டின் மற்றொரு முக்கிய அமைப்பான தேசிய புள்ளியியல் ஆணையத்தின் தலைவர் பதவி விலகியுள்ளார்.

தேசிய புள்ளியியல் ஆணையம், செயல் தலைவர் பி.சி.மோகனன் மற்றும் உறுப்பினர் ஜே.வி.மீனாட்சி ஆகியோர் சற்றுமுன் பதவி விலகியதாகா செய்திகள் வெளிவந்துள்ளது. மத்திய புள்ளியில் மற்றும் திட்ட செயலாக்கத்துறையின் கீழ் செயல்படும் தன்னாட்சி அமைப்புதான், தேசிய புள்ளியியல் ஆணையம். இந்த அமைப்பு வேலைவாய்ப்பு, பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை தயாரிக்கும் அதிகாரம் கொண்ட அமைப்பு. ஆனால் அந்த ஆணையம் தயாரித்த வேலைவாய்ப்பு தொடர்பான புள்ளி விவரங்களை வெளியிட மத்திய அரசு மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியடைந்த இந்த அமைப்பின் தலைவர் ராஜினாமா செய்துவிட்டதாக கூறப்படுகிறது.

ராஜினாமாவிற்கு பின் பி.சி.மோகனன் கூறுகையில், எங்களை கலந்து ஆலோசிக்காமல் ஒவ்வொரு விஷயத்திலும் மத்திய அரசு செயல்படுகிறது. எங்களை அரசு தொடர்ந்து ஓரம்கட்டி வந்தது. தேசிய புள்ளியியல் ஆணையத்தின் சமீபத்திய சர்வே முடிவுகளை அரசு செயல்படுத்தவில்லை. 2017-2018ம் ஆண்டுக்கான தேசிய அளவிலான வேலைவாய்ப்பு சர்வேயை அமல்படுத்தவில்லை. அதனால் பதவியை ராஜினாமா செய்தேன் என்று கூறினார்.

Leave a Reply