shadow

தேசிய அரசியலை குறி வைக்கின்றாரா கமல்?

கொல்கத்தாவில் நடைபெறும் 23வது சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்ள நேற்று உலக நாயகன் கமல்ஹாசன் சென்னையில் இருந்து கொல்கத்தாவுக்கு சென்றார். அங்கு அவர் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியை மரியாதை நிமித்தம் சந்தித்து பேசினார்

மம்தா பானர்ஜியுடனான சந்திப்பு குறித்து கமல் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, ‘என்னை அழைத்ததற்கும், சிறந்த சினிமா கலைஞர்களை பெருமைப்படுத்தியதற்கும் நன்றிகள். நானும், அந்தக் குடும்பத்தில் அங்கமாக இருப்பதற்கு பெருமைப்படுகிறேன். ஒற்றுமைக்கும், பன்முகத்தன்மைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறீர்கள்’ என்று பதிவு செய்துள்ளார்.

இந்த சந்திப்பில் அரசியல் எதுவும் இல்லை என்று கமல் விளக்கமளித்தாலும் மேற்கில் கேரள முதல்வர் பினராயி விஜயன், வடக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெரிவால் ஆகியோர்களை சந்தித்த சந்தித்த கமல், நேற்று கிழக்கில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்துள்ளதாகவும், இதன் மூலம் கமல் தேசிய அரசியலை குறிவைப்பதாகவும் அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

Leave a Reply