shadow

தேசிங்கு ராஜா வழிபட்ட தேசூர்

2தெய்வீகச் சிறப்புகள் நிறைந்த இத்தலத்தின் பெருமாள், தேசூர் மாடவீதிகளில் தன் தேவியரோடு திருவீதி உலா வருவதற்காக திருத்தேர் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கிருத யுகத்தில் மகரிஷிகளுக்கும் கிட்டாத பெரும் பேறு இக்கலியுகத்தில் பக்தர்களின் இல்லம் தேடி பரமன் திருத்தேரில் காட்சி அளிப்பதின் மூலம் கிடைக்கின்றது. சர்வலோக சரண்யனான எம்பெருமானைத் திருத்தேரில் கண்டு வணங்குபவர்களுக்கு மீண்டும் பிறப்பு இல்லை என்பதோடு இத்தகைய சேவையினால் நாம் பல பிறவிகளில் செய்த தீவினைகளும் நம்மை விட்டு அகன்று விடும் என்பது மகரிஷிகளின் வாக்காகும். தமிழகத்தை ஆண்ட மன்னர்கள் மட்டுமல்லாது சத்தியத்தையும் தர்மத்தையும் துணை கொண்டு நல்லாட்சி புரிந்த மன்னன் தேசிங்கு ராஜா வழிபட்ட தேசூர் பெருமானின் திருத்தலம் சென்று அமரற்கரிய ஆதிபிரானின் திருவடித்தாமரைகளில் சரணடைவோம்.

திருத்தலம் செல்லும் வழி

வந்தவாசியிலிருந்து திண்டிவனம் செல்லும் சாலையில் உள்ள தெள்ளார் என்னும் ஊரிலிந்து 7 கி.மீ. தூரத்திலும் வந்தவாசியிலிந்து சேத்துப்பட்டு செல்லும் சாலையில் மழையூர் கூட்டுச் சாலையிலிந்து 7 கி.மீ. தூரத்திலும் உள்ளது தேசூர் திருத்தலம்.

ஆற்காடு நவாபின் வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி வீரத்தின் விளைநிலமாகத் திகழ்ந்த ராஜா தேசிங்கு ‘தேசூர்’ என்ற இடத்திலும் தனக்கு ஒரு கோட்டை அமைத்துக் கொண்டார். அப்பகுதியைத் தனது இரண்டாவது தலைநகராகக் கொண்டு நல்லாட்சி நடத்தியதற்கு ஆதாரமாக இடிபாடுகளோடு தேசூர் கோட்டை நின்றுகொண்டிருக்கிறது. செஞ்சிக் கோட்டைக்கும் தேசூரில் உள்ள கோட்டைக்கும் நிலவறை மற்றும் சுரங்கப் பாதை இருந்ததற்கான ஆதாரம் இன்றும் காணப்படுகிறது.

இஷ்டதெய்வம் அரங்கநாதப் பெருமான்

செஞ்சிக்கு அருகில் உள்ள சிங்கவரம் என்னும் தலத்தில் அருள்பாலிக்கும்  அரங்கநாதப் பெருமான் மன்னன் ராஜா தேசிங்கின் இஷ்ட தெய்வமாகும். அரங்கனின் திருச்சன்னதியில் உத்தரவு கிடைத்த பிறகே ஆட்சி பரிபாலனம் தொடர்பான முக்கிய முடிவுகளை எடுக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தான் இம்மன்னன். அரங்கனிடம் ஆசி பெறுவதோடு, மற்றொரு தலைநகரமாக விளங்கிய தேசூர் திருத்தலத்தில் அருள்பாலிக்கும் ஆதிகேசவப் பெருமானின் மீதும் அளவற்ற பக்தி கொண்ட ராஜா தேசிங்கு, நேரம் கிடைக்கும் போதெல்லாம் இங்கு வந்து வணங்கி இப்பெருமானின் திருவருளைப் பெற்றுள்ளான்.

நீலவேணியில் சவாரி

செஞ்சிக் கோட்டையிலிருந்து தேசூர் கோட்டைக்குப் பயணிப்பதற்காகவே சுமார் 27 கிலோமீட்டர் தூரத்திற்குச் சுரங்கப் பாதை அமைத்து, தன்னால் அடக்கப்பட்ட `நீலவேணி` என்னும் குதிரையின் மீது சவாரி செய்து தேசூர் திருத்தலம் வந்து வழிபட்டுச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தான் ராஜா தேசிங்கு. பிற்காலச் சோழ மன்னர்களாலும் பல்லவ மன்னர்களாலும் திருப்பணி செய்யப்பட்ட  ஆதிகேசவப் பெருமானின் திருக்கோயிலுக்கு மன்னன் ராஜா தேசிங்கும் பல திருப்பணிகளைச் செய்து ஆனந்தம் அடைந்துள்ளான். `தேஜ் சிங்` என்ற பெயர் கொண்ட தேசிங்கு ராஜாவின் பெயர் காரணமாகவே இத்தலத்திற்கு `தேசூர்` என்ற திருநாமம் ஏற்பட்டுள்ளது. செஞ்சிக் கோட்டையின் அடிவாரத்தில் தேசூர் செல்லும் சுரங்கப் பாதையின் வழியைக் குறிப்பிடும் வண்ணமாக `தேசூர் பாட்டை’ என்ற சாலை உள்ளதை இன்றும் நாம் காணலாம்.

செஞ்சிக் கோட்டையிலிருந்து தேசூர் கோட்டைக்குப் பயணிப்பதற்காகவே சுமார் 27 கிலோமீட்டர் தூரத்திற்குச் சுரங்கப் பாதை அமைத்து, தன்னால் அடக்கப்பட்ட `நீலவேணி` என்னும் குதிரையின் மீது சவாரி செய்து தேசூர் திருத்தலம் வந்து வழிபட்டுச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தான் ராஜா தேசிங்கு. பிற்காலச் சோழ மன்னர்களாலும் பல்லவ மன்னர்களாலும் திருப்பணி செய்யப்பட்ட  ஆதிகேசவப் பெருமானின் திருக்கோயிலுக்கு மன்னன் ராஜா தேசிங்கும் பல திருப்பணிகளைச் செய்து ஆனந்தம் அடைந்துள்ளான். `தேஜ் சிங்` என்ற பெயர் கொண்ட தேசிங்கு ராஜாவின் பெயர் காரணமாகவே இத்தலத்திற்கு `தேசூர்` என்ற திருநாமம் ஏற்பட்டுள்ளது. செஞ்சிக் கோட்டையின் அடிவாரத்தில் தேசூர் செல்லும் சுரங்கப் பாதையின் வழியைக் குறிப்பிடும் வண்ணமாக `தேசூர் பாட்டை’ என்ற சாலை உள்ளதை இன்றும் நாம் காணலாம்.

தேசூர் ஸ்ரீ ஆதிகேசவப் பெருமான்

தன்னிகரற்ற வீரமும் தெய்வ பக்தியும் கொண்ட மன்னன் ராஜா தேசிங்கு வழிபட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க தேசூர் திருத்தலத்தில் நான்மறைகள் போற்றும் மெய்ப்பொருள் நாயகன்  ஆதிகேசவப் பெருமான் தன் தேவியரான தேவி பூமிதேவி சமேதராக அற்புதக் காட்சி தருகின்றார். திருவாழியும் திருச்சங்கும் துலங்க அணிமணி ஆபரணங்களுடன் திவ்ய தரிசனம் தரும் திருமகள் உறைமார்பனின் திருக்கோலம், வழிபடும் அடியவர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொள்கின்றது. கலியுகத்தில் பக்தர்கள் தன்னைக் கண்குளிரக் கண்டு தரிசிக்க வேண்டும் என்பதற்காகவே எம்பெருமான் அமைத்துக்கொண்ட அர்ச்சாவதாரத் திருக்கோலத்தின் மேன்மையை இத்திருத்தலத்தில் நிதர்சனமாக உணரலாம் என்று சிலிர்ப்போடு தெரிவிக்கின்றனர் இங்கு வழிபடும் பக்தர்கள்.

ஆடி வெள்ளியில் ஊஞ்சல் சேவை

இத்திருக்கோயிலில் அருள்பாலிக்கும் தாயார் ` எத்திராஜவல்லி’ எனும் திருநாமத்துடன் உவமைகளுக்கெல்லாம் எட்டாத எழிற்கோலத்தில் கருணை பொங்கும் திருமுக தரிசனத்தோடு காட்சி தருகிறாள். ஆடி வெள்ளிக் கிழைமைகளில் இத்திருக்கோயிலில் நடைபெறும் ஊஞ்சல் சேவையின்போது தாயாரையும் பெருமானையும் ஒருசேர தரிசிக்கப் பல பிறவிகளில் புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. தாயாரின் சன்னதியில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் திருமணத் தடைகள் நீங்கி விரைவில் திருமணம் நடக்கும் என்றும் மழலைப் பேறு இல்லாத தம்பதியருக்கு மழலைப் பேறு வாய்க்கும் என்றும் பக்தர்களிடையே நம்பிக்கை உள்ளது.

வைணவ சித்தாந்தத்தை உலகுக்கு உணர்த்திய உடையவர் எம்பெருமானார்,  மத் ராமானுஜருக்கு சித்திரை மாதத்தில் உடையவர் உற்சவமும் சித்ரா பெளர்ணமி திருநாளில் `கஜேந்திர மோட்சம்’ நிகழ்ச்சியும் இத்தலத்தில் மிகவும் சிறப்பாக நடைபெறுகின்றன. கஜேந்திர மோட்சத்தின்போது, எம்பெருமான் தேசூருக்கு அருகிலுள்ள `திரக்கோயில்’ என்னும் தலத்தின் குளக்கரையில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பது இன்றும் மிகப் பெரிய விழாவாகக் கொண்டாடப்படுகின்றது.

Leave a Reply