திருமங்கலம் மற்றும் துலுக்கப்பட்டி இரட்டை ரயில் பாதை பணிகள் காரணமாக தென் மாவட்ட ரயில்கள் இயக்கத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது இது குறித்து தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது

திருச்சியில் இருந்து மதுரை வழியாக திருவனந்தபுரம் வரை இயக்கப்படும் இன்டர்சிட்டி சிறப்பு ரெயில் (வ.எண்.0262/.02628) வருகிற 21-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை இருமார்க்கங்களிலும் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

* சென்னை-நாகர்கோவில் சிறப்பு ரெயில் (வ.எண்.06063) வருகிற 25-ந் தேதியும், மறுமார்க்கத்தில் நாகர்கோவிலில் இருந்து புறப்படும் ரெயில் (வ.எண்.06064) வருகிற 26-ந் தேதியும் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

* தாம்பரம்-நாகர்கோவில் சிறப்பு ரெயில் (வ.எண்.06065) வருகிற 28, 29-ந் தேதிகளிலும், மறுமார்க்கத்தில் நாகர்கோவிலில் இருந்து வருகிற 29, 30-ந் தேதிகளில் தாம்பரம் புறப்படும் சிறப்பு ரெயில் (வ.எண்.06066) ஆகியன முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.

* குருவாயூர்-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.06128) நாளை (சனிக்கிழமை) முதல் வருகிற 29-ந் தேதி வரையிலும், மறுமார்க்கத்தில் சென்னை-குருவாயூர் எக்ஸ்பிரஸ் (வ.எண்.06127) வருகிற 21-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை நெல்லை-சென்னை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

* சென்னை-நெல்லை எக்ஸ்பிரஸ் (வ.எண்.02631) வருகிற 25-ந் தேதி முதல் 29-ந் தேதி வரையிலும், மறுமார்க்கத்தில் நெல்லை-சென்னை எக்ஸ்பிரஸ் (வ.எண்.02632) வருகிற 26-ந் தேதி முதல் 30-ந்தேதி வரை நெல்லை-மதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. அதாவது இந்த ரெயில் சென்னையில் இருந்து மதுரை வரை இயக்கப்படும். மதுரையில் இருந்து சென்னைக்கு செல்லும்.

* நாகர்கோவில்-கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.06321/06322) வருகிற 21-ந்தேதி முதல் 30-ந் தேதி வரை இரு மார்க்கங்களிலும் நெல்லை-மதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

* புனலூர்-மதுரை சிறப்பு ரெயில் (வ.எண்.06730) வருகிற 26-ந் தேதி முதல் 29-ந் தேதி வரையிலும், மறுமார்க்கத்தில் மதுரை-புனலூர் சிறப்பு ரெயில் (வ.எண்.06729) வருகிற 27-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை நெல்லை-மதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

* கோவை-நாகர்கோவில் சிறப்பு ரெயில் (வ.எண்.02668) வருகிற 26-ந் தேதி முதல் 29-ந் தேதி வரையிலும், மறுமார்க்கத்தில் நாகர்கோவில்-கோவை சிறப்பு ரெயில் (வ.எண்.02667) வருகிற 27-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை நெல்லை-மதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

* மைசூர்-தூத்துக்குடி சிறப்பு ரெயில் (வ.எண்.06236) வருகிற 29-ந் தேதியும் மறுமார்க்கத்தில் தூத்துக்குடி-மைசூர் சிறப்பு ரெயில் (வ.எண்.06235) 30-ந் தேதியும் நெல்லை- மதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

* சென்னை-செங்கோட்டை சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.06181) 25-ந் தேதி முதல் 27-ந் தேதி வரையிலும், மறுமார்க்கத்தில் செங்கோட்டை-சென்னை சிலம்பு எக்ஸ்பிரஸ் (வ.எண்.06182) 26-ந் தேதி முதல் 28-ந் தேதி வரையிலும் மானாமதுரை வரை மட்டும் இயக்கப்படும்.

* நாகர்கோவிலில் இருந்து வருகிற 30-ந் தேதி மும்பை செல்லும் சிறப்பு ரெயில் (வ.எண். 06340) மதுரை வழியாக இயக்கப்படுவதற்கு பதிலாக திருவனந்தபுரம், சொரனூர் வழியாக இயக்கப்படும்.

Leave a Reply