தென்கிழக்கு அரபிக்கடலில் புயல் சின்னம்: கனமழைக்கு வாய்ப்பு

தென்கிழக்கு அரபிக்கடலில் புயல் சின்னம் ஏற்பட்டுள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது

ஏற்கனவே தென்மேற்கு பருவமழை சமீபத்தில் தொடங்கி கேரளாவில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனையடுத்து குற்றாலத்தில் அனனத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்தொடங்கிவிட்டது

இந்த நிலையில் தென்கிழக்கு அரபிக்கடலில் புயல் சின்னம் தோன்றியுள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்த புயல்சின்னம் காரணமாக தென்மேற்கு பருவமழை மேலும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நல்ல மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள தமிழக பகுதியில் தண்ணீர்பஞ்சத்திற்கு முடிவு கட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply