தூக்கி சாப்பிட்டுவிடுவார்: விஜய்சேதுபதியிடம் விஜய் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்

விஜய்யின் அடுத்த படமான தளபதி 64’ திரைப்படத்தில் விஜய்சேதுபதி வில்லனாக நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் விஜய் இந்த படத்தில் கொஞ்சம் அசந்தால் விஜய்சேதுபதி அவரைத் தூக்கிச் சாப்பிட்டு விடுவார் என பிரபல இயக்குனர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்

விஜய்சேதுபதி ‘தளபதி 64’ படத்தில் வில்லனாக நடித்தாலும் அவரது கேரக்டர் இந்த படத்தில் ஹீரோவுக்கு இணையான கேரக்டர் என்பதால் விஜய்யின் கேரக்டரை விட விஜய் சேதுபதி கேரக்டர் பேசப்படும் கேரக்டராக இந்த படத்தில் மாறிவிட வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ’பேட்ட’ படத்தில் வில்லனாக விஜய்சேதுபதி நடித்து இருந்தாலும் அந்த படத்தில் அவர் ஒரு சிறிய கேரக்டரில் மட்டுமே நடித்திருந்தார். அந்த படத்தின் மெயின் வில்லன் அவருடைய தந்தையாக நடித்த நவாசுதின் சித்திக் தான். எனவே ரஜினியை விஜய் சேதுபதியால் தூக்கி சாப்பிட முடியவில்லை

ஆனால் அதே நேரத்தில் ’விக்ரம் வேதா’ படத்தில் மாதவன் நாயகனாக நடித்திருந்தார், விஜய்சேதுபதி வில்லனாக நடித்திருந்தார். இந்த படமே விஜய்சேதுபதி படம் என்ற என்று சொல்லும் அளவுக்கு மாதவனை பின்னுக்கு தள்ளிவிட்டார் விஜய்சேதுபதி. அதேபோல் விஜய்க்கும் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் விஜய் தனது கேரக்டரில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும் என்று அந்த இயக்குனர் எச்சரித்துள்ளார். மொத்தத்தில் விஜய்சேதுபதியுடன் நடிப்பது விஜய்க்கு ஒரு சவால் தான்

Leave a Reply