தீ முகம் தான்’ பாடலுக்கு போட்டியாக வெளிவரும் சிங்கப்பெண்ணே

அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் இடம்பெற்ற தீ முகம்தான் என்ற பாடல் சற்று முன் வெளியாகி இணையதளங்களை வைரலாக்கி வரும் நிலையில் வரும் 23ம் தேதி விஜய்யின் பிகில் படத்தில் இடம் பெற்ற சிங்கப்பெண்ணே என்ற பாடல் வெளிவரும் என அந்த படத்தின் தயாரிப்பாளர் அறிவித்துள்ளார்

இதுகுறித்து அர்ச்சனா கல்பாதி தனது ட்விட்டரில் தெரிவித்த போது ‘சிங்கப்பெண்ணே பாடல் இந்த நாட்டிலுள்ள ஒவ்வொரு மகளுக்கும் அர்ப்பணிக்கும் பாடலாக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள இந்தப் பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது

 

Leave a Reply