shadow

தீபாவளி அன்று மெர்சல் படத்தும் மோதும் விஷாலின் ‘வில்லன்’

கடந்த 2014ஆம் ஆண்டு விஜய் நடித்த ‘கத்தி’ படத்துடன் விஷால் நடித்த ‘பூஜை’ திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த போட்டியில் கத்தி வெற்றி பெற்றது. இந்த நிலையில் மூன்று வருடங்கள் கழித்து மீண்டும் விஜய் படத்துடன் விஷால் படம் மோதுகிறது. ஆனால் இந்த முறை விஷாலுடன் மோகன்லாலும் கைகோர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆம் தீபாவளி தினத்தன்று விஜய்யின் ‘மெர்சல்’ வெளியாகும் அதே தினத்தில் மோகன்லால், மஞ்சுவாரியர், விஷால், ஹன்சிகா நடித்த ‘வில்லன்’ என்ற மலையாள திரைப்படம் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் விஷால் வில்லன் கேரக்டரில் நடித்துள்ளார்.

கடந்த 2014ஆம் ஆண்டை போலவே இந்த வருடமும் விஜய் படம் வெற்றி பெறுமா? அல்லது மெர்சலை வில்லன் தூக்குவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Reply