shadow

திரைப்படமாகும் பிரபல நகைச்சுவை நடிகரின் வாழ்க்கை வரலாறு

தமிழ் சினிமா நகைச்சுவை நடிகர்களில் மக்கள் மனதில் இருந்து இன்னும் நீங்காமல் இருப்பவர் நகைச்சுவை நடிகர் சந்திரபாபு. இவர் நடிகராக மட்டுமின்றி பாடகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பல அவதாரங்களில் ஜொலித்தவர். இந்த நிலையில் சந்திரபாபுவின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் ‘ஜேபி தி லெஜண்ட் ஆஃப் சந்திரபாபு’ என்ற பெயரில் தயாராகவுள்ளது.

இந்த படத்தை இயக்குனர் கே.ராஜேஷ்வர் இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே ‘அமரன்’, ‘கோவில்பட்டி வீரலட்சுமி’, ‘அமரன் 2’ உள்பட பல படங்களை இயக்கியுள்ளார்.

தமிழ் சினிமாவில் சந்திரபாபுவின் உயரத்தை போல் யாரும் தொட்டதில்லை. அதேபோல் அவரை போல் யாரும் அதளபாதாளத்தில் வீழவும் இல்லை. விதியின் ஆட்டத்தில் வீழ்ந்த ஒரு கலைஞனின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை ரூரோ இண்டர்நேஷனல் சார்பாக ரஷ்யா தங்கப்பன், கே.ராஜேஷ்வர் மற்றும் குட்டி பத்மினி ஆகியோர் இணைந்து தயாரிக்கவுள்ளனர்.

Leave a Reply