shadow

திருவாரூர் தேர்தலில் பாஜக போட்டியா? தமிழிசை பதில்

திருவாரூர் தேர்தலில் போட்டியிட அதிமுக, திமுக, அமமுக ஆகிய கட்சிகள் தயாராகி வருகிறது. மேலும் நாம் தமிழர் கட்சியும் போட்டியிட போவதாக அறிவித்துள்ளது.

இந்த நிலையில் திருவாரூர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து வரும் 6-ம் தேதி முடிவு செய்யப்படும் என பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு நோட்டாவுக்கும் குறைவான வாக்குகளை பெற்ற பாஜக, மீண்டும் ஒரு விஷப்பரிட்சையில் இறங்குமா? என்பது வரும் 6ஆம் தேதி தெரியவரும்

 

Leave a Reply