shadow

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் முதல்வராக பொறுப்பேற்ற பின் பல நகரங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து ஆய்வு செய்து வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் நாளை அதாவது ஜூலை 6ஆம் தேதி திருவாரூர் மாவட்டம் செல்கிறார்

வரும் 6ஆம் தேதி திருவாரூர் மாவட்டத்திற்கு செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின், காட்டூரில் உள்ள அஞ்சுகம் அம்மாள் நினைவிடம் சென்று அஞ்சலி செலுத்துகிறார்.

ஜூலை 7ஆம் தேதி திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு செய்யவுள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.