shadow

திருவாரூர் இடைத்தேர்தல்: மதிமுக எடுத்த முக்கிய முடிவு

திருவாரூர் தொகுதியில் இம்மாதம் 28ஆம் தேதி இடைத்தேர்தல் என தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்துள்ள நிலையில் அரசியல் கட்சிகள் இந்த தேர்தலில் போட்டியிட ஆயத்தமாகி வருகின்றன.

திமுகவும், அதிமுகவும் இந்த தேர்தலில் போட்டியிடுபவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ள நிலையில் திருவாரூர் தேர்தலில் மதிமுக, திமுகவுக்கு ஆதரவு தரும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

திமுக கூட்டணியில் மதிமுக இல்லை என திமுக பொருளாளர் துரைமுருகன் ஏற்கனவே பேட்டி ஒன்றில் கூறியுள்ள நிலையில் வைகோ தாமாகவே திமுக வேட்பாளருக்கு ஆதரவு கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply