திருமணமான புதுப்பெண்ணை கடத்த முயற்சி: உறவினர்கள் மடக்கியதால் பரபரப்பு

திருமணமாகி ஒரு மாதமே ஆன புதுப்பெண்ணை போலி சமூக சேவகர் ஒருவர் கடத்த முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலை சேர்ந்த தங்கமணி என்பவர் சமூக சேவகர் என்ற பெயரில் அந்த பகுதியில் நடமாடி வந்துள்ளார். மேலும் அந்த பகுதியில் உள்ள ஒரு பெண்ணிடம் தன்னுடைய அலுவலகத்தில் வேலை வாங்கித் தருவதாகவும் அவர் மிகுந்த அக்கறை இருப்பது போன்றும் நடித்துள்ளார் இதனை நம்பிய அந்த பெண் அவரிடம் சகஜமாக பழகி உள்ளார்

இந்த நிலையில் அந்த பெண்ணுக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. அந்த பெண்ணுக்கு திருமணம் நடைபெற உள்ளதை அறிந்ததும் அந்தத் திருமணத்தை நிறுத்த பல விதங்களில் தங்கமணி முயற்சித்துள்ளார். ஆனால் அது முடியாத நிலையில் அந்தப் பெண்ணுக்கு திருமணமாகி சென்னைக்கு குடி போய்விட்டார்

திருமணம் ஆகியும் அந்த பெண் மீது உள்ள காதல் காரணமாக தங்கமணி அந்த பெண்ணிடம் தொலைபேசியில் பேசி வந்துள்ளார். அந்த பெண்ணும் எப்போதும் போல் சகஜமாக பேசிக் கொண்டிருக்க இதன் காரணமாக கணவன் மனைவி இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது

இந்த நிலையில் சென்னைக்கு நேரடியாக சென்று அந்த பெண்ணை சந்தித்த தங்கமணி அவரிடம் நீண்டநேரம் பேசியதோடு அவரை கடத்த முயன்றுள்ளார். இதுகுறித்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்களும் அந்த பெண்ணின் உறவினர்களும் சுதாரித்து உடனடியாக கடத்த முயன்ற அந்த தங்கமணியையும், அவருடன் வந்த ஒருவரையும் பிடித்து காவல்துறையில் ஒப்படைத்துள்ளனர்
இருவரையும் காவல்துறையினர் கைது செய்து தற்போது விசாரணை செய்து வருகின்றனர். விசாரணையில் தங்கமணி இதேபோல் பல பெண்களுடன் வாட்ஸ் அப் குரூப் மூலம் பழகி உள்ளதாகும் அவரது வாட்ஸ்அப் குரூப்பில் சுமார் 100 பெண்கள் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது

Leave a Reply