திருமணத்திற்கு முன் செக்ஸ் வேண்டாம்: பிரபல இசையமைப்பாளர் அறிவுரை

பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் என பல்வேறு துறைகளில் ஜொலித்து வருபவர் கேனே வெஸ்ட். இவர் பிரபல நடிகை, பாடகி கிம் கர்தர்ஷனின் கணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தான் சிறுவயதில் செக்ஸ் அடிமையாக இருந்ததாகவும், அதனால் தனக்கு பெரும் துன்பங்கள் ஏற்பட்டதாகவும் தனக்கு நேர்ந்தது போல் பிறருக்கு நேராமல் இருக்க வேண்டுமெனில் திருமணத்திற்கு முன் யாரும் செக்ஸ் உறவு வைத்து கொள்ள வேண்டாம் என்றும் அவர் அறிவுரை கூறியுள்ளார்.

எந்தெந்த பருவத்தில் எதை எதை செய்ய வேண்டும் என்பதை நம்முடைய முன்னோர்கள் வகுத்த கொள்கையின்படி வாழ வேண்டும் என்ற தமிழ் கலாச்சாரம் தான் உலகம் முழுவதும் தாமதமாக புரிந்து கொள்ளப்பட்டு வருகிறது

Leave a Reply