shadow

திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தலை ஒத்திவைக்க அழுத்தத்தங்கள் காரணமா? தலைமை தேர்தல் ஆணையர்

தமிழகத்தில் காலியாக உள்ள இரண்டு தொகுதிகளான திருப்பரங்குன்றம், திருவாரூர் ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தலை ஒத்திவைக்க பிறரின் அழுத்தங்கள் காரணம் அல்ல என்று தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் திட்டவட்டமாக கூறினார்.

நேற்று டெல்லியில் பேட்டியளித்த தலைமை தேர்தல் கமிஷனர் ஓ.பி.ராவத் இதுகுறித்து மேலும் கூறியதாவது :-

யாருடைய அழுத்தத்துக்கும் அடிபணிந்து தமிழகத்தில் 2 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை ஒத்திவைக்கவில்லை. திருப்பரங்குன்றம் தொகுதியில் ஏற்கனவே நடந்த இடைத்தேர்தல் தொடர்பாக ஐகோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது.

திருவாரூரைப் பொறுத்தமட்டில், தமிழகத்தில் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்ததை தமிழக அரசு தலைமைச் செயலாளர் சுட்டிக்காட்டி இருந்தார். அதனால்தான் இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை.

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் தொடர்பான வழக்கில் வருகிற 23-ந் தேதி முடிவு ஏற்பட்டால், அதில் இருந்து 6 மாத காலத்துக்குள் 2 தொகுதிகளுக்கும் சேர்த்து தேர்தல் நடத்தப்படும்.

Leave a Reply