shadow

திருப்பதி கோவில் நகைகள் மாயமானது எப்படி? சந்திரபாபு நாயுடு விசாரணை

திருப்பதி திருமலை கோவிலின் முன்னாள் தலைமை அர்ச்சகர் ரமண தீட்சிதர், கடந்த சில நாட்களாக தேவஸ்தானத்தின் மீது குற்றச்சாட்டுகளை கூறி வருவதோடு, கோவிலுக்கு சொந்தமான ரூ.500 கோடி மதிப்புள்ள வைரக்கல் ஜெனிவாவில் ஏலத்தில் விடப்பட்டுள்ளதாகவும் லட்டு தயாரிப்பு கூடம் தோண்டப்பட்டு பழங்கால ஆபரண நகைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டி வருகிறார். இத்தனை வருடம் அர்ச்சகர் பணியில் இருந்தபோது இந்த குற்றச்சாட்டினை கூறமால் தற்போது அவர் கூறியிருப்பது சந்தேகத்தை எழுப்பினாலும் இதுகுறித்து விசார்ணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தலைமை அர்ச்சகரின் இந்த குற்றச்சாட்டிற்கு தேவஸ்தான செயல் அதிகாரி அனில்குமார் சிங்கால் மறுப்பு தெரிவித்து விளக்க மளித்தார். இந்நிலையில் ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று அமராவதியில் தேவஸ்தான செயல் அதிகாரி அனில்குமார் சிங்கால் மற்றும் அறங்காவலர் குழுத் தலைவர் சுதாகர் யாதவிடம் விசாரணை நடத்தினார்.

இது குறித்து அனில்குமார் சிங்கால் நிருபர்களிடம் கூறியதாவது:-

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் நிதிமுறைகேடு நடந்ததாக பல்வேறு குற்றச்சாட்டுகள் வந்துள்ளது. இது குறித்து முதல்வருக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் கோவிலுக்குள் உள்ள பழமைவாய்ந்த வகுல மாதா சமையற்கூடத்தில் சுவர், தரைகள் தவிர்த்து சமைப்பதற்கு வசதியாகவும், தூய்மையாக பராமரிக்கவும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

300 தங்க டாலர் காணாமல் போனதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு ஏற்கனவே போலீசார் வழக்குப்பதிவு செய்து, சி.ஐ.டி. விசாரணை நடந்தது. இதில், குற்றவாளிக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் கிடைத்தது. மேலும், தேவஸ்த்தனத்தில் பல கோடி முறைகேடு நடந்ததாகவும் சி.பிஐ. விசாரிக்க வேண்டும் என்றும் பல்வேறு குற்றச்சாட்டுகள் வந்தள்ளது. இதேபோல், அர்ச்சகர்களிடையே ஏற்பட்டுள்ள விவாதம், ரமணதீட்சிதலு குற்றச்சாட்டு உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் குறித்து முதல்வரிடம் எடுத்துரைக்கப்பட்டது

Leave a Reply