திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விஐபி தரிசனம் முழுமையாக ரத்து

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ள விஐபி தரிசன முறையில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதாக அவ்வப்போது புகார்கள் எழுந்து வருகின்றன

கோவிலில் வழிபடும் இடத்திலேயே முறைகேடு நடப்பது பக்தர்கள் பெரும் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் பக்தர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தும் இந்த விஐபி தரிசன முறையை ரத்து செய்ய திருமலை தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்துள்ளது

இதன் அடிப்படையில் முக்கிய பிரமுகர்களுக்கான விஐபி தரிசனம் ரத்து செய்யப்படும் என்றும் விஐபி தரிசனத்தை ரத்து செய்வதால் ஒரு மணி நேரத்துக்கு சுமார் 5000 பக்தர்கள் அதிகமாக பொது தரிசனத்தில் வழிபடலாம் என்பதால் இந்த விஐபி தரிசனத்தை ரத்து செய்வதாக திருமலை தேவஸ்தான அதிகாரி சுப்பாரெட்டி அவர்கள் கூறியுள்ளார்

Leave a Reply