திமுக பொதுச்செயலாளர் க. அன்பழகனுக்கு திடீர் மூச்சுத்திணறல்: மருத்துவமனையில் அனுமதி

திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் அவர்களுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

94 வயதான தி.மு.க பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் அவர்களுக்கு நேற்றிரவு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும் இதனையடுத்து அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

பேராசிரியர் அன்பழகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி அறிந்ததும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் நேரில் வந்து மருத்துவர்களிடம் அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்தனர்

Leave a Reply