திமுக தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சற்றுமுன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுகவின் தேர்தல் அறிக்கையை வாசித்தார். அதன் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

* மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டுவரப்படும்

* பெண்களுக்கு தொழில்தொடங்க ரூ.50 ஆயிரம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும்

* பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க வலியுறுத்தப்படும்

* கல்வி மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வரப்படும்

* மாணவர்களின் கல்விக் கடன் முழுமையாக ரத்து செய்யப்படும்

* வேளாந்துறைக்கு தனி பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய நடவடிக்கை

* சிலிண்டர் மானியம் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுவது நிறுத்தப்பட்டு, சிலிண்டர் விலை குறைக்கப்படும்

* மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு முறை ரத்து செய்யப்படும்

* தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் அனைத்தும் தமிழில் செயல்பட, தமிழை இணை ஆட்சி மொழியாக அங்கீகரிக்க சட்டத்திருத்தம்

* இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை

* 50 லட்சம் பெண்களுக்கு மக்கள் நலப்பணியாளர் வேலை

* பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்வதில் பழைய முறையை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்

* பெண்களுக்கு தொழில்தொடங்க ரூ.50 ஆயிரம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும்

* “சமூக ஊடகங்களில் அதிகரிக்கும் பாலியல் ரீதியான சம்பவங்களை தவிர்க்க புதிய சட்டம்

* நெடுஞ்சாலைகளில் வசூலிக்கப்படும் சுங்க வரி கட்டணம் ரத்து!

* நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்

* தென்னிந்திய நதிகளை இணைக்க நடவடிக்கை!

* கேபிள் டிவிக்கு பழைய முறை கட்டணம் வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும்

* மாணவர்கள் ரயிலில் இலவசமாக பயணம் செய்ய வழிவகை செய்யப்படும்

* தனி நபர் வருமானத்தை ஒரு லட்சமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்

Leave a Reply