shadow

திமுகவில் இரண்டு பொறுப்புகள் யாருக்கும் கிடையாது! மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு

திமுகவில் உள்ள நிர்வாகிகள் ஒவ்வொருவருக்கும் ஒரு பொறுப்பு மட்டுமே வழங்கப்படும் என்றும் இரண்டு பொறுப்புகளில் உள்ளவர்கள் தானாக முன்வந்து ஒரு பொறுப்பில் இருந்து விலகிவிட வேண்டும் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியபோது, ‘இரண்டு நிர்வாக பொறுப்புகளில் உள்ளவர்கள் ஏதேனும் ஒரு பொறுப்பில் மட்டும் நீடிக்க விருப்பம் தெரிவித்து தலைமைக்கு கடிதம் அனுப்ப வேண்டும் என்றும், தலைமைக்கு கடிதம் கொடுக்காத பட்சத்தில் தாமாகவே விலகிவிட்டதாக கருதப்படும் என்றும் கூறியுள்ளார்

மேலும் இரண்டு பொறுப்புகளில் செயல்பட்டு வந்த நிர்வாகிகளுக்கு பதில், புதியவர்களை வரும் 15-ம் தேதிக்குள் நியமிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply