நேற்று நடைபெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது

நேற்றைய போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி ஆமை வேகத்தில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 142 ரன்கள் மட்டுமே எடுத்தது

இதனை அடுத்து 143 என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடிய கொல்கத்தா அணி 18 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்து 145 ரன்கள் எடுத்தது

கில் மிக அபாரமாக விளையாடி 70 ரன்கள் அடித்தார். மோர்கன் 42 ரன்களும் ராணா 26 ரன்களும் எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்றைய வெற்றிக்கு கேப்டன் தினேஷ் கார்த்திக்கின் கேப்டன்ஷிப் மிக முக்கிய காரணம் ஆகும்

இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா அணி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply