தினகரன் கொடுத்த அதே பதவியை கொடுத்த முக ஸ்டாலின்

சமீபத்தில் தினகரனின் அமமுகவில் இருந்து திமுகவில் இணைந்த தங்கதமிழ்செல்வன் தற்போது
திமுக கொள்கை பரப்புச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் திருச்சி சிவா, ஆ.ராசா ஆகியோருடன் இணைந்து செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது

அமமுகவில் கொள்கை பரப்புச் செயலாளர் பதவியை தினகரன் அளித்திருந்த நிலையில் திமுகவிலும் அதே பதவியை தங்கதமிழ்செல்வனுக்கு அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

ஏற்கனவே அமமுகவில் இருந்து திமுகவில் இணைந்த செந்தில்பாலாஜி தற்போது திமுகவின் எம்.எல்.ஏவாக இருந்து வரும் நிலையில் விரைவில் தங்கதமிழ்செல்வன் எம்.எல்.ஏ ஆவார் என எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply