தினகரனுடன் தேனி மாவட்ட அமமுகவினர் சந்திப்பு: முக்கிய முடிவு எடுக்கப்படுமா?

தினகரன் குறித்து தங்க தமிழ்ச்செல்வன் கடுமையாக பேசிய ஆடியோ ஒன்று நேற்று முதல் வைரலாகி வரும் நிலையில் இன்று தினகரன் தேனி மாவட்ட அமமுக நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபடவுள்ளதாக செய்திகள் வெளிவந்தது

இந்த நிலையில் இன்று காலை சென்னை அடையாறில் தினகரனை தேனி மாவட்டத்தை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட அமமுகவினர் சந்தித்தனர்.

தினகரனை விமர்சித்து தங்க தமிழ்செல்வன் பேசியதாக ஆடியோ வெளியான நிலையில் நிர்வாகிகளின் சந்திப்பு நடைபெறுகிறது என்பதும் இந்த சந்திப்பில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்பு இருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது

 

Leave a Reply