திடீர் திடீரென டெலிட் ஆகும் ’கோபேக் மோடி’ டுவீட்டுக்கள்: என்ன காரணம்?

பிரதமர் மோடி ஒவ்வொரு முறை தமிழகத்திற்கு வரும் போதும் திமுகவினர் மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் ’கோபேக் மோடி என்று நேரிலும் டுவிட்டரிலும் கோஷம் எழுப்புவதை வழக்கமாக கொண்டுள்ளனர்

கடந்த முறை மூடி தமிழகத்திற்கு வந்தபோது கூட இந்த கோபமாகி உலக அளவில் டிரெண்ட் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது

ஆனால் அதே நேரத்தில் இந்த முறை பிரதமர் மோடி, சீன அதிபரை சந்திக்க வரும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக வருவதால் ’கோபேக் மோடி’ கோஷம் இருக்காது என்றே கருதப்பட்டது

ஆனால் வழக்கம் போல் இன்று காலையும் ’கோபேக் மோடி டுவிட்டரில் டிரெண்ட் ஆனது. திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் பிரதமர் மற்றும் சீன அதிபரின் சந்திப்பை தான் வரவேற்பதாக தெரிவித்திருந்தும் இந்த கோஷம் ஏன் என்பது தெரியவில்லை

இந்த நிலையில் திடீரென ’கோபேக் மோடி டுவீட்டுக்கள் டெலிட் செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது இதற்கான உத்தரவு எங்கிருந்து வந்தது என்பது மர்மமாகவே உள்ளது

Leave a Reply