திடீரென அரசியலில் குதித்த சாய்னா நேவல்: எந்த கட்சியில் தெரியுமா?

பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் சற்று முன்னர் திடீரென பாஜகவில் இணைந்துள்ளார். பாஜக தேசிய செயலாளர் அர்ஜுன் சிங் தலைமையில் இன்று அவர் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டு பாஜகவின் உறுப்பினர் அட்டையும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது

சாய்னா நேவால் மட்டுமின்றி அவரது சகோதரியும் பாஜகவில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக கௌதம் கம்பீர் உள்பட பல விளையாட்டு வீரர்கள் பாஜகவில் இணைந்து உள்ள நிலையில் தற்போது அந்த பட்டியலில் சாய்னா நேவால் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

பாஜகவில் சாய்னா நேவால் இணைந்துள்ளதை அடுத்து ராஜ்யசபா உறுப்பினர் பதவி அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது மேலும் விளையாட்டு துறை சம்பந்தமான பதவியும் அவருக்கு அளிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது

Leave a Reply