shadow

தாஜ்மஹாலை காக்க அக்கறை இல்லையா? மத்திய அரசுக்கு நீதிமன்றம் கேள்வி

உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலை ஆபத்தில் இருந்து காக்கவும், சுற்றுச்சூழல் காரணமாக தாஜ்மஹாலின் அழகு குறைந்து வருவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கடந்த சில மாதங்களாக வற்புறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இதுகுறித்த பொதுநல வழக்கு ஒன்று சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு குறித்த விசாரணை இன்று நடைபெற்றபோது ‘தாஜ்மஹாலை காக்க மத்திய அரசுக்கு அக்கறை இல்லையா என சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் தாஜ்மஹாலை பராமரிக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதாக மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தது

சுப்ரீம் கோர்ட் கண்டனத்திற்கு பின்னராவது மத்திய அரசும் உபி மாநில அரசும் தாஜ்மஹாலை பாதுகாக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று சுற்றுலாப்பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

Leave a Reply