தவறுதலாக இளம்பெண்ணின் வங்கி கணக்கிற்கு வந்த 25 மில்லியன் டாலர்
ஆஸ்திரேலியாவை சேர்ந்த இளம்பெண் ஒருவரின் வங்கி கணக்கில் திடீரென 25 மில்லியன் டாலர் பணம் வந்திருப்பதால் அவர் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளார்
கிறிஸ்துமஸ் திருநாள் நெருங்கி வரும் நிலையில் உலகம் முழுவதிலும் உள்ள கிறிஸ்துவர்கள் கிறிஸ்துமஸ் செலவுக்காக பணம் புரட்டி வரும் நிலையில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த கிளேர் வெயின்ரைட் என்ற இளம்பெண்ணின் வங்கிக்கணக்கில் திடீரென 25 மில்லியன் டாலர் வந்துள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வங்கிக்கு தகவல் கொடுத்தும் இதுகுறித்து வங்கி அதிகாரிகள் இன்னும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாக அவர் தனது ஃபேஸ்புக்கில் புகைப்படத்துடன் பதிவு செய்துள்ளார்.. இதுகுறித்து வங்கி அதிகாரி கூறியபோது, அந்த பெண்ணின் வங்கி கணக்குக்கு இவ்வளவு பெரிய தொகை எப்படி வந்தது? என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாக தெரிவித்தனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.