shadow

தவணை முறையில் விமான டிக்கெட். ஸ்பைஸ் ஏர்ஜெட் அறிமுகப்படுத்தும் புதிய திட்டம்

spice jetஇதுவரை வீட்டிற்கு தேவையான மிக்சி, கிரைண்டர், டிவி, வாஷிங் மிஷின் போன்ற பொருட்களை ஈ.எம்.ஐ என்ற தவணை திட்டத்தின் மூலம் வாங்கிய பொதுமக்கள், இனி விமான கட்டணத்தையும் ஈ.எம்.ஐயில் கட்டலாம். இதுபோன்ற ஒரு புதிய வசதியை ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் அறிவித்து உள்ளது.

இந்திய உள்நாட்டு விமான சேவைகளை மிக குறைந்த கட்டணத்தில் விமான பயணிகளூக்கு சேவையை அளித்து வரும் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம், வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில், இலகு தவணை கட்டணம்(EMI) மூலம் டிக்கெட் பெறும் வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது.
 
இந்த திட்டம் “புக் நௌ, பே லேட்டர்”  ( Book now Pay latter) என்ற பெயரில் இன்று முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் டிக்கெட் பெறும் வாடிக்கையாளர்கள், 3 முதல் 12 மாத தவணையில் தங்கள் பயணத்திற்கு தேவையான பணத்தை செலுத்தலாம்.

ஆனால் இப்போதைக்கு “ஆக்சிஸ் வங்கி”, “எச்.எஸ்.பி.சி வங்கி”, “கோட்டாக் வங்கி” மற்றும் “ஸ்டாண்டட் சார்ட்டட்” வங்கிகளின் கிரெடிட் கார்ட் வைத்திருக்கும் பயணிகள் மட்டுமே இந்த வசதியை பெற்றுக்கொள்ள முடியும்.

இதன் மூலம் பயண டிக்கெட்டுக்கு வாடிக்கையாளர்கள் செலுத்தும் மாத அளவை பொறுத்து, வட்டி வீதம் 12 முதல் 14 சதவீதம் வரை இருக்கும்படி வடிவமைக்கப்பட்டு உள்ளதாகவும், இந்த திட்டம் பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெறும் என்றும் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்து உள்ளது.

Leave a Reply